முதல்வர் நாற்காலியில் அமரும் ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்..!
முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆங்காங்கே உள்ள லோக்கல் தாதாக்கள் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, மணல் கொள்ளை, கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச்செல்வாக்ரள் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் கூட முதலமைச்சர் பழனிசாமி, எல்லா இடத்திலும் இந்த பிரச்சனையை கூறிதான் அதிமுகவிற்கு வாக்கு சேகரித்தார். இந்நிலையில், திமுக பெயரை கூறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை புதிய அரசு அடக்க வேண்டும்.
தற்போதைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய சவால்களில ஒன்று கொரோனா வைரஸ் தொற்று பரவல். தடுப்பு மருந்து தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவவல்லுனர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதேப்போல் ஸ்டாலினுக்கும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா பிரச்சனையை அவரால் எதிர்கொள்ள முடியும்.
கொரோனா ஊரடங்கு மற்றும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். அவர்களுக்க வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்
கொரேனா தடுப்பு நடவடிக்கை நெறிமுறையால் பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், அதனை மீடெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனாவின் காரணமாக கடந்த 2020 ஆம் நிதியாண்டில் 5.28% ஆக வீழ்ச்சியடைந்த ஜிடிபி விகிதத்தை மேம்படுத்துவது மிக முக்கிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.
அரசின் வரி வருவாய், 4,56,660 கோடி ரூபாய் கடன் ஆகிய மிகப்பெரிய பிரச்சனையை புதிய அரசு கையாலவேண்டும்.