அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

மனைவி பார்பராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதற்கு மறுநாள், ஞாயிறன்று உடல் நல குறைவின் காரணமாக ஜார்ஜ் W.H. புஷ், ஹூஸ்டனிலுள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

73 ஆண்டு நீண்ட இல்லறத்திற்கு பின் பார்பரா தமது 92-ம் வயதில் காலமானார். தற்போது 93 வயதாகும் புஷ், ஏற்கனவே ஒரு வகை பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலின் கீழ் பகுதியை இந்நோய் தாக்கியுள்ளது.

தற்போது மூச்சுப் பிரச்னையால் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் சிகிச்சையை ஏற்றுக்கொள்வதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>