வினை செய்தவன் வினை அறுப்பான் – துரோகம் செய்த எம்எல்ஏக்கள்.. பாடம் புகட்டிய மக்கள்!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து பல எம்எல்ஏக்கள், தற்போதைய தேர்தலில் 3 பேரைத் தவிர மற்றவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
2017 முதல் திரிணாமுல் கட்சியிலிருந்து சுமார் 37 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 140 பேர் பாஜகவுக்குத் தாவினர். இப்படிச் சேர்ந்தவர்கள், 2020-ல் பாஜகவுக்குத் தாவியவர்கள், தேர்தல் சந்தர்பவாதத்தைப் பயன்படுத்தித் தாவியவர்கள் என்று அனைவருக்கும் பாஜக சீட்டு கொடுத்தது. சுவேந்து அதிகாரி ந ந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
திரிணாமூல் கட்சியிலிருந்து பாஜகவுக்குத் தாவிய கோடீஸ்வரர் முகுல் ராய் கிருஷ்ணா நகர் தொகுதியில் வென்றார். அதே போல் வடக்கு வங்காளத்தில் நடபாரியில் திரிணாமூலிலிருந்து பாஜகவுக்குத் தாவிய மிஹிர் கோஸ்வாமி இழுபறிக்கு பிறகு வெற்றி பெற்றார், இவர்கள் மூன்று பேர் தவிர பாக்கி கட்சித்தாவிகள் மண்ணைக்கவ்வினர். இதில் முன்னாள் அமைச்சர் ராஜிவ் பானர்ஜி உட்பட அனைவரும் தோல்வி தழுவி மண்ணைக்கவ்வினர். சிங்கூர் இயக்கத்தின் முக்கிய முகங்களுள் ஒன்றான ரவீந்திர நாத் பட்டாச்சார்யா, முகுல் ராயின் மகன் சுப்ரான்ஷு ராய் ஆகியோருக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.
பாலே தொகுதியில் போட்டியிட்ட பைஷாலி டால்மியா, டைமண்ட்ஹார்பர் தொகுதியில் போட்டியி்டட தீபக் குமார் ஹால்தர், உத்தர்பராவில் போட்டியிட்ட பிரபிர் கோஷல், கால்னா தொகுதியில் போட்டியிட்ட பி்ஸ்வஜித் குண்ட், சிங்கூரில் போட்டியிட்ட ரவிந்திரநாத் பட்டாச்சார்யா ஆகியோர் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவி்ல இணைந்து தேர்தலில் வாய்ப்பு பெற்றனர்.ரஇவர்கள் அனைவருமே தோல்வி முகம் காட்டியுள்ளனர்.
மாநில பாஜக தலைமை திலிப் கோஷ் கூறும்போது, “நாங்கள் விருப்பப்பட்டது போல் முடிவுகள் இல்லை. என்ன தவறு நடந்தது என்பதை ஆராய வேண்டும்”என்றார். அமித்ஷா, மோடி வியூகங்களை எல்லாம் தவிடு போடியாக்கி மீண்டும் தனிப்பெரும்பான்மை ஆட்சியை நிறுவ இருக்கிறார் மம்தா.மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திரிணாமூல் 213 இடங்களையும் பாஜக 77 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. துரோகிகளுக்கு மக்கள் இந்த தேர்தலில் பாடம் புகட்டியுள்ளனர்.