கொரோனா தடுப்பூசிகளுக்கு புதிதாக ஆர்டர் கொடுக்கவில்லையா? - விளக்கம் கொடுத்த மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,959 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு புதிதாக ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை என சில ஊடகங்களில் இன்று செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது மத்திய அரசு, புள்ளிவிவரத்துடன் விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தி முற்றிலும் தவறானது. சீரம் நிறுவனத்திடம் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுக்கும் மட்டுமே கடைசியாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஆர்டர் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறுகின்றன. இந்த தகவல் அனைத்தும் முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது.

மே, ஜூன், ஜூலை மாதங்களில், 11 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்க சீரம் நிறுவனத்துக்கு 100 சதவீத பணத்தை முன்பணமாக ரூ.1732.50 கோடி (வரி பிடித்தம் செய்யப்பட்ட பின் ரூ.1699.50 கோடி) 2021 ஏப்ரல் 28ம் தேதி அன்றே வழங்கப்பட்டு விட்டது. இதேபோல், பாரத் பயோடெக் இந்தியா நிறுவனத்திடம் 5 கோடி கோவாக்சின் டோஸ்கள் வழங்க, 100 சதவீத முன்பணம் ரூ.787.50 கோடி (வரி பிடித்தத்துக்குப் பின் ரூ.772.50 கோடி) 2021 ஏப்ரல் 28ம் தேதி வழங்கப்பட்டு விட்டது. எனவே, தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு புதிதாக ஆர்டர் கொடுக்கவில்லை என கூறுவது முற்றிலும் தவறானது" எனக் கூறப்பட்டுள்ளது.

More News >>