பூங்கோதைக்கு கிடைத்த ஆப்பு.. திமுக கோட்டையை தகர்த்த ஹரி நாடார்!

ஹரி நாடார் தமிழகத்தில் பரிட்சயமான நபராக மாறிப்போனார். எப்போதும் கழுத்தில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து நகைக்கடை போலவே நடமாடி வரும் அவர், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே இந்த தொகுதியில் இறங்கி களப்பணியாற்றினார் ஹரிநாடார். தினமும் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரை மக்கள், கழுத்தில் தங்க நகைகளை அணிந்து நகைக்கடை அணிந்து வருவதால் ஆரம்பத்தில் வேடிக்கையாகவே பார்க்கத் தொடங்கினார்கள்.

ஆனால், போகப்போக ஹரி நாடாரின் நடவடிக்கை மற்றும் வாக்குறுதி காரணமாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவர் பின்னால் அணிவகுக்க தொடங்கினர். கூடவே பெண்கள் ஆதரவும் கிடைக்க தொடங்கியது. இதுபோக, பனங்காட்டு படையின் கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா, ஹெலிகாப்டரில் வந்து ஹரிநாடாருக்காக ஆலங்குளம் தொகுதிக்குள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட கூடுதல் பலம் பெற்றார் ஹரி நாடார். இதனால் நாளுக்கு நாள் தொகுதிக்குள் அவருக்கான செல்வாக்கு கூடியது.

அதேநேரம், ஆரம்பத்தில் இருந்தே ஹரிநாடாரை கவனத்தில் கொள்ளாமலும் வேடிக்கையாவே பார்த்து வந்தார் தி.மு.க வேட்பாளர் பூங்கோதை. இதன்காரணமாக ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் 37,724 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இது கடைசியில் பூங்கோதைக்கு ஆப்பாக முடிந்தது. ஹரிநாடார் பெற்றுள்ள வாக்குகள் காரணமாக தி.மு.க வேட்பாளர் பூங்கோதை 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மூன்றாம் முறையாக சட்டமன்றத்துக்குள் செல்வது தடைபட்டுள்ளது. இந்த முறை வெற்றிபெற்றால் பூங்கோதை சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படலாம் என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் அந்த கனவை தகர்த்திருக்கிறார் ஹரி நாடார்.

More News >>