இதுதான் பினராயி விஜயன்.. முதல்வர் பதவி குறித்து நச் பதில்!
கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களை வென்றுள்ளது.
இதன்மூலம் தொடர்ச்சியாக வரலாற்று ரீதியான இரண்டாவது வெற்றியை வெற்றிபெற்று அசத்தியுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி நடக்கப்போவது கேரளாவில் இப்போது தான் முதல்முறை. இதனை சாத்தியமாக்கியவர் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
இதனால் இந்த முறையும் அவர் தான் முதல்வராக பதவியேற்க போகிறார் எனக் கூறப்படுகிறது. அதன்படியே, சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது நிருபர் ஒருவர் நீங்கள் எப்போது முதல்வராக பதவி ஏற்கப் போகிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு, பினராயி விஜயன், ``யார் முதல்வர் என்பதை எங்கள் கட்சி இன்னும் முடிவு செய்யவே இல்லையே... எங்கள் மாநிலக்குழு கூடி விவாதிதத்து முடிவு செய்து, கட்சி தலைமையின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் யார் எங்கள் கட்சியின் சார்பில் முதல்வர் என்பதே தெரியும்" என்று அசால்ட்டாக பதில் தெரிவித்து இருக்கிறார்.