முதலமைச்சர் ஆனதும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து இதுதான்.. முழு எதிர்பார்ப்பில் மக்கள்..

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலின், பதவியேற்றதும் தமது முதல் கையெழுத்து இதற்காகதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் திமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

அதேபோல், திமுக கூட்டணி கட்சிகளும் கணிசமான இடங்களில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து வருகின்றன. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக என அனைத்து கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்று தமது முதல் கையெழுத்து எதற்காக என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார். அதில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்க்கும் துறை ஒன்றை உருவாக்குவதாகவே இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் முழு கவனம் செலுத்தப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More News >>