புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
12 மணி நேரம் மாரடோனா உயிருக்குப் போராடியதாகவும் குறித்த நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் இன்று நம்முடன் இருந்திருப்பார் என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
அர்ஜென்டீனா கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திரம் டீகோ மாரடோனா அண்மையில் மறைந்தார். 1986 உலகக்கோப்பையை அர்ஜென்டீனா வெல்ல மாரடோனாதான் காரணம். அந்தப் புகழ்பெற்ற ஹேண்ட் ஆஃப் காட், கடவுளின் கை என்ற பதம் அப்போது முதல் பிரபலமானது. மரடோனாவுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனிடையே அண்மையில், மாரடைப்பால் பியூனஸ் அய்ரஸ் நகருக்கு வெளியே வாடகை வீட்டில் இறந்தார் மரடோனா.
இந்நிலையில் மருத்துவ அறிக்கையில், “அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற மருத்துவ விவரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 12 மணி நேரம் அவர் உயிருக்கு வேதனையுடன் போராடியுள்ளார். வாடகை வீட்டில் இருந்த அவருக்குக் கிடைத்த மருத்துவ உதவிகள் போதாமையாக இருந்தது. அவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவர் நிச்சயம் பிழைத்திருப்பார் என்று மருத்துவ அறிக்கையில் 20 மருத்துவர்களும் கூறியுள்ளனர்.
மாரடோனா அளவுக்கதிகமாக போதை மருந்தான கொகெய்ன் எடுத்துக் கொள்பவர், அளவுக்கதிகமாக மது அருந்தும் பழக்கமுடையவர். 2000 மற்றும் 2004-ல் கிட்டத்தட்ட இறப்பின் வாசலைத் தொட்டதாக கூறப்படுவதுண்டு.
ஆனால் இந்த மருத்துவ அறிக்கை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஜோடிக்கப்பட்டது என்ற விமர்சனமும் அங்கு எழுந்துள்ளது. அவருக்கு நவம்பர் 3, 2020-ல் மூளை அறுவை சிகிச்சை நடந்தது 25 நவம்பர் 2020-ல் அவர் மரணமடைந்துள்ளார்.