வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?

கோவிட்-19 நோய்க்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடுவதன் மூன்றாம் கட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளபடியால் தற்போது அதற்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அல்லது அருகில் அமைந்துள்ள தடுப்பூசி மையங்களை அறிவதற்கு பல வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலமும் தடுப்பூசி மையம் இருக்குமிடத்தை தெரிந்துகொள்ளலாம்.

மைகௌ கொரோனா (MyGov Corona) உதவி மையத்தின் சாட்பாட் மூலம் மக்கள் தங்கள் பகுதியில் தடுப்பூசி மையம் செயல்படும் முகவரியை அறிந்துகொள்ளலாம்.

அருகிலுள்ள தடுப்பூசி மையத்தை வாட்ஸ்அப் மூலம் தெரிந்துகொள்ளும் முறை

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும். உங்கள் தொலைபேசி எண்ணில் வாட்ஸ்அப் கணக்கு ஆரம்பித்திருக்கவேண்டும்.

உங்கள் ஸ்மார்ட்போனில் 9013151515 என்ற எண்ணை சேமிக்கவும் அல்லது https://api.whatsapp.com/send/?phone=919013151515&text=Hi&app_absent=0 என்ற இணைப்பை சொடுக்கவும்.

அந்த எண்ணுக்கு Hi என்று டைப் செய்து உரையாடலை ஆரம்பிக்கவும்.

இதற்கு தானியங்கி முறையில் பதில் வரும். தொடர்ந்து சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். இறுதியில் நீங்கள் வசிக்கும் பகுதியின் அஞ்சல் குறியீட்டை (பின்கோடு) உள்ளிட வேண்டும்.

பின்கோடை உள்ளிட்டதும் அப்பகுதியில் செயல்படும் தடுப்பூசி மையங்களின் முகவரிகள் னுப்பி வைக்கப்படும்.

வாட்ஸ்அப் தவிர, MapmyIndia மற்றும் CoWIN இணைய தளங்கள் மூலமும் கோவிட்-19 தடுப்பூசி மையங்கள் செயல்படும் இடங்களின் முகவரிகளை தெரிந்துகொள்ளலாம்.

More News >>