திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 158 இடங்களை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. தி.மு.க மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது. சென்னையிலுள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கட்டிலில் திமுக அமரப்போகிறது. முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் நேரடியாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரவுள்ளார்.

ஆட்சியமைக்க உரிமைகோரும் கடிதத்துடன், திமுக அமைச்சரவை பட்டியலையும் கொடுக்கவுள்ளார்.

பதவியேற்பு விழா 7 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆட்சியமைக்கும் முன்பே திமுக தலைவர் அதிரடி காட்டி வருகிறார்.

அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 1,212 செவிலியர்களின், ஒப்பந்த காலம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், அவர்களுக்கு நிரந்தர பணி அளிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது.

இதேபோல் வெறொரு விஷயத்திலும், மு.க.ஸ்டாலின் அதிரடி காட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் இல்லாதபோது, திமுகவிற்கு குடைச்சல் கொடுத்த அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் மற்றும் பொறுப்பு குறைப்பு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

More News >>