வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...

பிரபல தமிழ் நடிகை நிகிலா கிடாரி, ரங்கா, தம்பி, போர் தொழில் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, வயநாடு நிலச்சரிவில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பல திசைகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பிரபலங்களும் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை நிகிலாவும் களத்தில் இறங்கி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

இதற்காக, டி.ஒய். எப். ஏ அமைப்பை சேர்ந்தவர்களுடன் கைகோர்த்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் பணியில் நிகிலா ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை டி.ஒய்.எப். ஏ தனது சமூகவலைத் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதே போல, பல சினிமா பிரபலங்களும் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் மோகன்லால் இந்த சமயத்தில் தயவு செய்து ஃபேக் செய்திகளை பரப்பாதீர்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More News >>