கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?

உங்களுக்கு பிசினஸ் தொடங்கனும்னு ஒரு ஆசை இருக்குதா? அல்லது உங்க சின்ன பிசினஸை விரிவு படுத்தனுமா... ? அதற்கு பணம் ஒரு தடையாக இருக்கிறதா... இனி கவலையே வேண்டாம்... உங்களை சிறந்த பிசினஸ்மேனா மாத்த மத்திய அரசே முடிவெடுத்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில், முத்ரா என்ற லோன் திட்டத்தை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை லோன் வாங்க முடியும். தற்போது, இந்த தொகையை கடந்த பட்ஜெட்டில் 20 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதோடு, லோன் தொகையில் 35 சதவிகிதம் மானியமாகவும் வழங்கப்படும் என்பது கூடுதல் பலன் ஆகும். 5 வருடங்களில் இந்த லோனை கட்டி அடைக்க வேண்டும்.

சரி இந்த லோனை வாங்க என்ன என்ன தகுதி இருக்க வேண்டும் என்று பார்த்தால் உங்கள் பிசினஸ் பற்றிய போதிய அறிவு இருக்கவேண்டும். எந்த நிதி நிறுவனம் மற்றும் வங்கிகளில் வாங்கிய லோனை முறையாக அடைத்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியானவர்கள் முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த லோனை வாங்க முடியும். தனியாகவும் வாங்கலாம்... அல்லது குழுவாகவும் இணைந்து இந்த லோனை வாங்க முடியும்.

முறையான அடையாள அட்டை, பிசினஸ் தொடங்குவதற்கான லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வீட்டு அட்ரசுக்கான ஆவணங்கள் போன்றவை வங்கியிடம் வழங்க வேண்டும். எந்த வங்கியில் இருந்தும் நீங்கள் லோன் வாங்கிக் கொள்ள முடியும். வங்கிக்கு சென்று லோன் விண்ணப்பத்தை வாங்கி நிரப்பி கொடுத்தால், உங்கள் ஆவணங்கள் சரியாக இருந்தால், ஓரிரு நாள்களில் தொகை உங்களுக்கு வந்து விடும். இந்த லோனை வாங்க யாருடைய கியாரண்டி கையெழுத்தும் தேவையில்லை என்பது சிறப்பம்சம்.

More News >>