அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை ஊத்து காக்காச்சி நாலு மூக்கு ஆகிய பகுதிகளில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர் .
தற்போது நீதிமன்ற உத்தரவுபடி அங்குள்ள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வசித்து வருகின்றனர். இருப்பினும் பேருந்து வசதி மீதமுள்ள மக்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது .
வழக்கம்போல் நேற்று இரவு மாஞ்சோலைக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. மணிமுத்தாறு அணைப்பகுதி சாலை அருகே சென்றபோது திடீரென வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று குறுக்கே வந்து பேருந்து வழிமறித்தது .
இதனால் பஸ்ஸில் இருந்தவர்கள் அலறினர் .அனைவரும் கூச்சல் போடவும் யானை சாலையின் நடுவே மெதுவாக சென்றது .பேருந்தும் ஆமை போல் நகர்ந்து சென்றது .சிறிது நேரத்தில் யானை வனப்பகுதிக்குள் மறைந்தது .
அதன்பின்னர் பேருந்து டிரைவர் சாமர்த்தியமாக மெதுவாக வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டி சென்றார் .
திடீரென சாலையில் வந்த யானை பேருந்துவழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது