சிறந்த பல்கலைக்கழகங்கள் அமெரிக்கவாழ் இந்தியர்கள் உருவாக்கியது: ஃபோர்ப்ஸ் பாராட்டு!

அமெரிக்காவின் தலைசிறந்த தொழில் கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் வளரச்செய்தது அமெரிக்கவாழ் இந்தியர்கள்தான் என பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

தொழில்கல்வி, வணிகக்கல்வி, பொருளாதாரம் போன்ற படிப்புகளுக்காக இந்தியாவின் தலைசிறந்த மாணவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காகப் படையெடுக்கத் தொடங்கினர். அவர்களில் ஒரு சாரர் அமெரிக்காவிலேயே சிறந்த ஆராய்ச்சியாளர்களாகவும் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும் பணிபுரியத் தொடங்கினர்.

இன்றைய சூழலில் அமெரிக்காவின் டாப் பிசினஸ் ஸ்கூல்ஸ் வரிசையில் உள்ள 90சதவிகித கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் ஒரு அமெரிக்கவாழ் இந்தியரையே தலைமைப் பொறுப்பாளர்களாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் 'பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்' டீன் சுனில் குமார் கடந்த 2016-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையின் உயர் தலைமை ஆனார்.

ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தின் தலைவராக ஒரு அமெரிக்கவாழ் இந்தியர் பொறுப்பேற்பது அதுவே முதன்முறையாக இருந்தது. ஆனால், படிப்படியாக அமெரிக்காவின் தலைசிறந்த பிசினஸ் ஸ்கூல்ஸ் தலைவர்களாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் பதவியேற்று வருகின்றனர்.

அவர்களாலே சிறந்த கல்வி நிர்வாகங்களும் உருவாகி வருகின்றனர் என்று பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் பெருமைபடுத்தியுள்ளது.

More News >>