ஆசையை தூண்டுவாங்க ஆன்லைன் கிரிமினல்கள்- நெல்லை , தென்காசி மக்களை எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்

நெல்லையில் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை காப்பாற்றி வரும் இளைஞர்களின் சொற்ப வருமானத் தையும் சைபர் கிரைம் கொள்ளையர்கள் ஆட்டையை போடும் அவலம் அரங்கேறுகிறது. இதனால், திருநெல்வேலி சரக டிஐஜி மூர்த்தி மற்றும் எஸ் பி சிலம்பரசன் ஆகியோர் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை வழங்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெ டுப்பின்படி 30.77 லட்சம் மக்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். தென்மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு அரசு தற்போது தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிதாக தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது.அதற்காக , முத லீட்டாளர்களை ஈர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ஆன்லைனில் ஏராளமான இளைஞர்களிடம் இருந்து பணத்தை ஆட்டைய போடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ' நெல்லையில் தற்போது பிரபல நிறுவனங்களின் பெயரைக் குறிப் பிட்டு ஆன்லைன் மூலம் மோசடி நடந்து வருகிறது. அடையளம் தெரியாத நபர்கள் டெலிகிராம் வாயிலாக தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நிறுவனத்தின் சார்பில் பேசுவதாகவும், தங்களது நிறுவனத் தில் உள்ள புரோமோட்டர்சுக்கு அதிக ரிவ்யூ கொடுத்து டாஸ்க் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறு கின்றனர். அதற்காக,முதலில் சிறிய தொகை முதலீடு செய்ய வேண்டும் என கூறுகின்றனர். ஆரம்பத்தில் டாஸ்க் நிறைவேற்றி கொடுத்தால், தற்குரிய பணத்தை அவர்களது வங்கியில் வரவு வைத்து நம்பிக்கை ஏற்படுத்து கின்றனர். இப்படி ஆசையை தூண்டி, ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வைக்கின்றனர். பின்னர், எந்த தொடர்பும் இல்லாமல் தலைமறைவாகி விடுகின்றனர். அப்படி, ஆன்லைனில் லட்சக்கணக்கில் மோசடி செய்து வரும் சம்பவங்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில். அதிகரித்து வருகிறது. இது போன்ற சைபர் மோசடிகளில் சிக்காமல் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி சரக டிஐஜி மூர்த்தி ஐ பி எஸ் மற்றும் எஸ் பி சிலம்பரசன் அறிவுரை வழங்கியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஆன்லைனில் பகுதி நேர வேலை, புராப்பர்ட்டி புரோமோஷன், ரிவ்யூ என்பது போன்ற விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்க ளிடமிருந்து வரும் டெலிகிராம். வாட்ஸ்அப் தகவல்களை நம்பக்கூ டாது. சைபர் மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்ய வேண்டும்' என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More News >>