நெல்லையில் ஆட்டோவில் வந்து ஆடு திருடிச் சென்ற கும்பல்: சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகேயுள்ள மேல கருங்குளம் அசோகபுரம் தெருவில் இன்று (பிப் 18)மதியம் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதில், டிரைவர் உட்பட 3 பேர் கொண்ட கும்பல் இருந்தது.
இந்த கும்பல் அக்கம் பக்கம் யாரும் இருக்கிறார்களா? என்று நோட்டம் பார்த்ததது. பின்னர், ஆட்டோவில் இருந்து ஒருவர் இறங்கி சென்று அங்கு, மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றினை அலேக்காக தூக்கிக் கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஏறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆட்டோ அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதுபோன்று ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், காவல்துறை விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்