கத்தியைக் காட்டி பாலியல் வன்கொடுமை - துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலிசார்..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இருவர் கத்தியைக் காட்டி வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளைக் கைது செய்ய வீரவாஞ்சி நகர் மலைப்பகுதிக்கு போலீசார் சென்றனர். அப்போது, போலிசாரைப் பார்த்ததும் இளைஞர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். அப்போது மாரியப்பன் என்ற இளைஞன் கீழே விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது. தப்பியோடிய மற்றொரு இளைஞர் மாரி செல்வத்தைத் தேடி வந்தனர்.

போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் புதுக்கோட்டை பகுதியில் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் மாரி செல்வத்தை கண்டுபிடித்தனர். போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி செல்ல முயற்சி செய்தார். அப்போது போலீசார் மாரி செல்வத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவருக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

More News >>