திசையன்விளை : உலக தையல் தொழிலாளர் தின விழா கொண்டாட்டம்

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நேற்று (பிப்ரவரி 27 )உலக தையல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, திசையன்விளை உடன்குடி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகம் முன்பு தையல் தொழிலாளர் சங்க கொடி ஏற்றப்பட்டது. நெல்லை மாவட்ட தையல் தொழிலாளர் சங்க தலைவர் ஆதிலிங்கம் கொடியேற்றி வைத்தார். கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட தையல் கலை தொழிலாளர்கள் "தையல் கலை தொழிலாளர்கள் வாழ்க ... தையல் கலை தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக "என கோஷமிட்டனர். பின்னர் பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். கொடியேற்று விழாவில் திசையன்விளை தையல்கலைத்தொழிலாளர் சங்க செயலாளர் ஜெபக்குமார்,பொருளாளர் விஜயராஜன், துணைச் செயலாளர் செந்தில், மாவட்ட பிரதிநிதிகள்இராஜசேகர்,நம்பித்துரை,முனிசாமி, கண்ணன், சுயம்பு, தில்லை ஆனந்தம், காட்சன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

More News >>