சாய்ந்தாடும் மூன்றாவது கண்... கண்டுகொள்ளுமா திசையன்விளை நிர்வாகம்!

நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுப்புற பகுதிகளில் கொள்ளையர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான சிடிடிவி கேமராக்களின் பராமரிப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. இதனால், பல சிசிடிவி கேமராக்கள் பழுதாகும் நிலை உள்ளது.

இந்த நிலையில், திசையன்விளையில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் புறவழிச்சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ள கம்பம் சாய்ந்து போய் கிடக்கிறது. இதனை உடனடியாக சரிய செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி சென்ற ஆட்டோ ராஜா என்பவர் , இந்த சாய்ந்தாடும் சிசிடிவி கம்பத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

More News >>