ஸ்டாலின் பிறந்த நாள் : திசையன்விளையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
முதல்வர் ஸடாலினின் 72வது பிறந்த நாள் விழாவை இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திசையன்விளை மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.மி.ஜோசப் பெல்சி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திரு.அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட கழக, ஒன்றிய கழக, கிளை கழக,திசையன்விளை கழக நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்து கொண்டனர்.