ஸ்டாலின் பிறந்த நாள் : பெட்டை குளம், கஸ்தூரி ரெங்கபுரத்தில் கொண்டாட்டம் அணைக்கரையில் அன்னதானம்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இரா. ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்படி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பெட்டைகுளம் என்.முருகன் தலைமையில் இராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் கஸ்தூரிரெங்கபுரம், பெட்டைகுளம்ஆகிய பகுதிகளில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், தமிழ்மொழியை காப்பாற்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. அணைக்கரை மெர்சி ஹோமில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதற்கு இராதாபுரம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் தனபால் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாராயணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஞான்ராஜ், கிளை செயலாளர்கள் பெட்டைகுளம் தாஜுதீன், பெட்டைகுளம் காலனி சேவியர், உறுமன்குளம் இசக்கிமுத்து, துரைகுடியிருப்பு வில்சன், கஸ்தூரிரெங்கபுரம் மாசானம், ஒன்றிய பிரதிநிதிகள் பெட்டைகுளம் அஜ்வாகிர், புலிகுளம் கார்த்திக்,இளைஞரணி ஆல்வின் ஏர்னஸ்ட், புலிகுளம் பாக்கியம், பெட்டைகுளம் யோசேப்பு, ஜெபமணி, பால், பெருங்குளம் இரத்தினம், கஸ்தூரிரெங்கபுரம் சித்திக்,முடவன்குளம் முத்துக்குமார் மற்றும் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பெட்டை குளம் என். முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

More News >>