களக்காடு வாழை விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடல்

மத்திய பட்ஜெட்டில் விவசாய பெருமக்களுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக திருநெல்வேலியில் களக்காடு வாழை தார் ஏல மையத்தில் விவசாயிகளுடன் பேசினார்.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது, விவசாய கடன் அட்டை (KCC Card ) இதுவரை 9.14 கோடி பேருக்கு வழங்க பட்டியிருப்பதாகவும், விவசாயம் கடன் அட்டை (KCC) கடன் ரூ. 3.00 லட்சத்திலிருந்து ரூ.5.00 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. KCC கடன் ரூ.5.00 லட்சம் வரை 7% வட்டியிலும், முறையாக திருப்பி செலுத்துபவர்களுக்கு 3% வட்டி மானியமும், ஆக 4% வட்டியில் KCCகடன் கிடைக்கும் . பிணை இல்லாமல் (Collateral Free ) KCC கடன் பெறுவது ரூ.1.60 லட்சத்திலுந்து ரூ.2.00 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது . கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்ட விவசாய கடன் அட்டை ரூ 9.84 லட்சம் கோடி . இது வரும் 2029-30 ம் ஆண்டுக்குள் ரூ 20.00 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்கடன், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்புக்கு விவசாயிகள் KCC கடன் பெற்று தங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் . சுய உதவிக் குழுவில் உள்ள மகளிருக்காக பெண்கள் மேம்பட்டிற்காக லக்பதி திதி (Lakpathi Diti) திட்டத்தில் பெண்களும் தொழில் முனைவோராக வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் பாஸ்கரன்,கலந்தப்பணை விவசாய உற்பத்தி குழு தலைவர் தமிழ்ச்செல்வன்,மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன்,விவசாய விற்பனை துணை இயக்குனர் பூவண்ணன், களக்காடு தோட்டக்களை உதவி இயக்குனர் சண்முகநாதன் , கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி இயக்குனர் பிரவீன் குமார், நிதிசார் கல்வி ஆலோசகர் மகாலிங்கம் மற்றும் களக்காடு பகுதியை சார்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் , தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் முன்னோடி வங்கி அலுவலர் குமார் சிறப்பாக செய்திருந்தார்

More News >>