ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 8.5 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் சபாநாயகர் தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான குமாரபுரம், அப்புவிளை, இடையன்குடி, ஆனைகுடி, முதுமொத்தன்மொழி மற்றும் க.புதூர் பஞ்சாயத்துகளில் சுமார் 8.5 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்ட குழு தலைவர் எஸ் ஆர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் மு. அப்பாவு கலந்து கொண்டு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஊராட்சி நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி, ஊராட்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி, முதல்வரின் கிராம சாலை திட்ட அநீதி மற்றும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிய நிதிகளின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டதோடு முடிவற்ற வளர்ச்சி திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர் வி எஸ் ஆர் ஜெகதீஷ் பேசியபோது , ஒன்றிய அரசு தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஊதிய தொகையை இன்னும் விடுவிக்காமல் உள்ளது. இதனால், சம்பளத் தொகை கொடுக்கப்பட முடியாமல் உள்ளது . இதற்கு விரைவில் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மேலும் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அரசு அமைந்த பின் ஒவ்வொரு பஞ்சாயத்து பகுதிகளிலும் மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த விபரப்பட்டியல் அனைத்து பஞ்சாயத்துகளிலும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளின் போது ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இளையபெருமாள், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகர், பஞ்சவர்ணம் ஜெயக்குமார், சாந்தாமகேஸ்வரன், ஆனந்தகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெஸ்ஸி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனிஷா பயாஸ், மாவட்ட பிரதிநிதி வேலப்பன், ராஜன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெய்சங்கர், கஸ்தூரி ரங்கபுரம் பாலன், உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, ஆனைக்குடி பால்ராஜ், தாமஸ், இடையன்குடி ஜெயக்குமார், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ராம் கிஷோர் பாண்டியன், காமில், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், கே புதூர் ராமகிருஷ்ணன், ஜான் கருத்தையா, சுப்பிரமணியன், சாகுல் ஹமீது, புலியடி குமார்,, எழில் ஜோசப், ராஜா, முத்து மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.