வள்ளியூர் கண்டிகைப்பேரி குளத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்: தாமிரபரணிக்கரையிலும் இனப்பெருக்கம்

காற்று மாசுபாடு குறைவு மற்றும் பாதுகாப்பு நிறைவு போன்ற காரணங்களால் பறவைகளின் வருகை அதிகரிப்பு என பறவை ஆர்வலர்கள் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆறு மற்றும் நீர் நிலைகள் வெளிநாட்டு வலசை பறவைகளின் தற்காலிக வாழ்விடமாக உருவாகியுள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, சைபீரியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து பிளாமிங்கோ, பயின்டில் டக், காமன் டீல், ஸ்பூன்பில், கூழைக்கிடா, பூ நாரை, வரித்தலை வாத்து, நீலச்சிறகு வாத்துக்கள், பட்டாணி உப்புக்குத்தி, மஞ்சள் வாலாட்டி , பொரி உள்ளான், நீளவால் தாழைக் கோழி, நீலச்சிறகு வாத்து சிவப்பு மூக்கு ஆட்காட்டி, முக்குளிப்பான், நெடுங்கால் உள்ளான் போன்ற பறவைகள் வள்ளியூர் கண்டிகைப்பேரி குளம், கூந்தன் குளம், தாமிரபரணி ஆற்று படுகை பகுதிக்கு இனப் பெருக்கத்துக்கு வருகின்றன. இதன் காரணமாக திருநெல்வேலி வேய்ந்தான் குளம், நைனார் குளம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், மருதனார்குளம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை ஆகிய இடங்களில் அதிகளவில் பறவைகள் காணப்படுகின்றன.

'பறவைகள் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துகின்றன. எனவே, அவற்றின் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளின் மாசுபாட்டை தடுப்பது மிகவும் அவசியமாகிறது. வருடம் முழுவதும் நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பதும். மிகவும் மேம்படுத்தப்பட்ட சுத்தமான காற்று இருப்பதும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு ஏற்ற சூழலாக உள்ளது. மார்ச் 1ஆம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக 'என பறவை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பறவைகளை பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் புகைப்படம் மற்று வீடியோ எடுத்து மகிழ்கின்றனர்.

More News >>