ஏம்பா நீ அன்னைக்கு சண்டை போட்டவன்தானே - பரணி கரையில் கே.என். நேருவால் கலகலப்பு
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்குள் மரம் நடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் கே.என். நேரு வந்திருந்தார். தொடர்ந்து, தாமிரபரணி கரையில் மரங்களை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக, ஏராளமான கட்சி நிர்வாகிகள் அவருக்கு சால்லை அணிவிக்க வந்தனர். அப்போது, ஏம்பா... எவ்வளவு சால்வைதாம்பா தருவீங்க என்று கே.என். நேரு தொண்டர்களிடத்தில் கேட்டார்.
இந்த சமயத்தில் மேலப்பாளையம் பகுதி செயலாளர் என்று கூறியபடி ஒருவர் கே.என்.நேருவுக்கு சால்வை கொடுத்தார். அப்போது, தெரியும் தெரியும், அன்னைக்கு நீதானே சண்டை போட்டாய்? என்று அவரிடத்தில் கேட்டார். இதை கேட்டதும் அந்த பகுதி செயலாளர் சிரித்தடி அங்கிருந்து இடத்தை காலி செய்தார். பின்னர், மரம் நடும் இடங்களை பார்வையிட்ட கே.என். நேரு, ஆற்றின் கரைகளில் மட்டும் மரங்களை நட வேண்டும். கரையை பலப்படுத்துங்கள். ஆற்றின் நடுவிலுள்ள முட்புதர்களை அகற்றுவதும் நல்லது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மரம் நடும் திட்டத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஜே.சி.பி எந்திரங்கள் கொண்டு ஆற்றின் நடுவில் வளர்ந்திருந்த முட்புதர்கள் அகற்றும் பணி தொடங்கியது.