எடப்பாடி மட்டுமே கிங் மற்றவர்கள் மங்க் - முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஜங்

அதிமுக ஒன்று சேர்ந்து விடுமோ, பாஜகவுடன் கூட்டணி வைத்து விடுமோ, என்கிற அச்சத்திலும் பயத்திலும் திமுகவினர் தவிப்பதாக தமிழக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதை கண்டித்து, செங்கோட்டை நகர் பகுதியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, 'கேரள மாநிலம் கனிம வளத்தை கொள்ளையடித்து விட்டு, மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டி வருகிறது. ஆனால், இதனை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை. கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியவில்லையென்றால், அதிமுகவிடம் திமுக ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து விட வேண்டும். அதிமுக சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக உள்ளது அல்லது அதிமுக ஒன்று சேர்ந்து விடுமோ என்கிற பயத்திலும் திமுக உள்ளது. தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில், எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் குறித்தும் திமுக பயத்தில் இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கிங். மற்றவர்கள் எல்லாம் மங். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட திமுகவினர் முன்வர மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

More News >>