நபார்டு வங்கி சார்பில் நெல்லை மாவட்டத்துக்கு மட்டும் ரூ. 18 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் இன்று (மார்ச் 6) நடைபெற்றது. நிகழ்ச்சியில் நபார்டு 2025- 26 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை நெல்லை ஆட்சியர் இரா. சுகுமார் வெளியிட்டார். இதில், நெல்லை மாவட்டத்துக்கு மட்டும் மொத்தம் 18 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மட்டும் 14 ஆயிரம் கோடி கடனாக வழங்கப்படவுள்ளது சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு 2864 கோடியும் ஏற்றுமதிக்கு 1.50 கோடி கடனாக வழங்கப்படலாம். கல்வி கடனுக்காக 31 கோடியும் வீட்டு வசதிக்கான கடன் வாய்ப்பு 283 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிறன் கடன்களுக்காக 331 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் பாஸ்கரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் முருகன், தாட்கோ மாவட்ட மேலாளர் பாஸ்கரன், வாழ்த்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் கணபதி , தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் இலக்குவன், கால்நடை பராமரிப்புதுறை இயக்குநர் ரிச்சர்ட் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More News >>