நீர்நிலைகளை பாதுகாக்க நீங்கள் தயாரா? ஆரல்வாய்மொழி நீர்நிலை பாதுகாப்பு குழு அழைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள நீர் நிலைகள் பாதுகாப்புக் குழு சமூக பொதுநல இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

'நீர் நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும், அதனை மேம்படுத்தவும், மழை நீர் சேமிப்பை தீவிரமாக செயல்படுத்திடவும் நீர் மேலாண்மையினை காக்கவும், அழிக்கப்படும் நீர்வள ஆதாரங்களை தடுக்கவும், விவசாயம், நிலத்தடி நீர் மட்டம் , சுற்றுச்சூழல், இயற்கை வளம் காக்கும் பணியில், இளம் தலைமுறையினர் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பங்கேற்க செய்தல் உள்ளிட்ட நோக்கங்களை நிறைவேற்றிடும் வகையில் சமூக பொதுநல இயக்கம் நீர் நிலைகள் பாதுகாப்புக் குழுவினை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி , அனைத்து நீர் நிலைகள் மற்றும் நீர வரத்து மற்றும் பாசன கால்வாய்களில் 15 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் இந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. எனவே தன்னார்வத்துடன் பணியாற்ற விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளவும்.

வரும் தலைமுறைக்காக மட்டுமல்லாது வாழும் தலைமுறையின் தேவைக்காகவும் நீர் நிலைகள் காக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டு உள்ளோம். சுய நல பேர்வழிகளின் பசிக்கு நீர் நிலைகள் இரையாகும் முன்பாக நாம் களத்தில் இறங்கி காத்திட வேண்டும்.எனவே , மகத்தான இப்பணியில் எங்களோடு கைகோர்த்து இணைந்து பணியாற்றிட உங்களையும் அழைக்கின்றோம். வாருங்கள் நீர் நிலைகளை மீட்போம். இயற்கை வளம் காப்போம்.

கைகோர்க்க விரும்புவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் - 88257 01082

More News >>