நெல்லை : அங்கன்வாடி ஊழியர்கள் . உதவியாளர்களை நிரந்தரம் செய்ய கோரி போராட்டம்

நெல்லை வண்ணாரப்பேட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மார்ச் 7 ஆம் தேதி நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.பிரேமா தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அங்கன்வாடி சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஞானாம்மாள், சி.ஐ.டி.யு மாவட்ட இணை செயலாளர்மலைபகவதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சிவசக்தி, மீனாபாய் , பூங்கோதை , ராஜேஸ்வரி , கோமதி , ஒமணா , மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

தி.மு.க தேர்தல் வாக்குறுதி 313 படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 24 மாதம் வரை நமது மையத்தில் இணை உணவை THR ராக வாங்கும் பயனாளிகளின் முகத்தை புகைப்படம் எடுத்து, போஸான் டிராக்கர் (பேஸ் கேப்சரி) செய்யும் முறையை உடனடியாக கைவிட வேண்டும்.மே மாதம் முழுவதும் மாதம் கோடை விடுமுறை வழங்கிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளருக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பணி ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஓய்வூதியமாக ரூ. 9, 000 ஆயிரம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முடிவில் மாவட்ட பொருளாளர் ஜூலிற்றா நன்றி கூறினார்.

More News >>