மகளிர் தினம்: திசையன்விளையில் த.வெ.க சார்பில் தாய்மார்களுக்கு சத்து நிறைந்த பொருட்கள் வழங்கல்
நெல்லை தெற்கு மாவட்டம் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுமார் அனைவரையும் வரவேற்றார்.
திசையன்விளைஅரசுமருத்துவமனையில் சமீபத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்கள் 50 பேர்களுக்கு ஹார்லிக்ஸ் மற்றும் பழ வகைகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலாளர் பிரசாத், பொருளாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சுனில் ராஜா, மணிவண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோனி , செயற்குழு உறுப்பினர் மைக்கேல் யோவான்,கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் லிவிங்ஸ்டன், முத்துதங்கராஜா,நிஷாந்தன் ,முத்துராமலிங்கம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தளபதி கணேஷ், ஜெயராமன் ராஜேந்திரன், அந்தோணிராஜ் ஜேசுஜெகன், சுரேஷ்குமார், வழக்கறிஞர் அணி சுரேஷ் திசையன்விளை நகரச் செயலாளர் கில்லிராஜா, தினேஷ் ,சிவா, அஷ்வின் ,நவாஷ் ,கூடுதாழை ,அன்பு ,விவேக் ,ஆனைகுடி சுரேஷ், ஜெஸ்பர், சிவா, இடையன்குடி அருள் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராதாபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.