அகஸ்தியர் அருவிக்கு செல்ல ரூ. 40 வேண்டாம் 20 போதும் : பொன்முடி அறிவிப்பின் பின்னணி
அகஸ்தியர் அருவிக்கு செல்லும் கட்டணம் 40 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிரடி குறைக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குளிக்க போவது வழக்கமானது. இதற்கு, ரூ. 30 கட்டணமாக பெறப்பட்டது. இந்த நிலையில், அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்களிடத்தில் இருந்து ரூ. 40 வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக , தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் புகார் சென்றுள்ளது.
இதையடுத்து, வனத்துறை அமைச்சர் எஸ். பொன்முடி இன்று (மார்ச் 7) கூறுகையில், இந்த புகார் வந்ததுமே, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். இதற்கு முன்னர், அகஸ்தியர் அருவிக்கு செல்ல ரூ.30 மட்டுமே வசூலிக்கப்பட்டது. அந்த தொகையை 30ல் இருந்து 20 ரூபாயாக குறைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்..