பிள்ளைகளை வாகனம் ஓட்டவிட்டு வேடிக்கை: 26 பெற்றோர்களுக்கு சிறை!
18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டியதால் 26 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உடபட்டோர் வாகனம் ஓட்டுவதாலேயே பெரும்பான்மையான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களின் பெற்றோர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் ஒரே நாளில் 26 சிறார்களின் பெற்றோர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிச் சிறுவர்கள், 18 வயது நிரம்பாத கல்லூரி மாணவர்கள் என வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதை ஹைதராபாத் போலீஸார் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர்.
இந்த விதிமுறையை தொடர்வதன் மூலம் சாலை விபத்துகளைக் குறைத்து சிறார்களையும் காக்கலாம் என ஹைதராபாத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com