நெல்லையில் அமரன் பட தியேட்டர் மீது குண்டு வீச்சு : கைதானவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம், நோதாஜி ரோட்டில் அலங்கார் தியேட்ர் உள்ளது. இங்கு , அமரன் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருந்தது. அமரன் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இது தொடர்பாக, திருநெல்வேலி மேலப்பாளையம், அல்அமீன் நகர், யுனைடட் காலனியை சேர்ந்த காதுரையா என்பவரின்க மகன் இம்தியாஸ் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். மத நல்லிணக்கத்துக்கு எதிராக இம்தியாஸ் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் , திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்( கிழக்கு) வினோத் சாந்தாராம், மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குப்புசாமி ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர். பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, இம்தியாஸ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

More News >>