219 ரூபாய்க்கு 40 ஜிபி...ஜியோ-வை காலிசெய்ய ஏர்டெல் அதிரடி!

டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவருவைதைக் காட்டிலும் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதே பெரும் சவலாக உள்ளது.

ஜியோ ஆஃபர்களுக்குப் போட்டியாக வோடஃபோன் சமீபத்தில் பல ஆஃபர்களை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்துத் தற்போது ஏர்டெல் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது.

ப்ரீபெய்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 219ரூபாய்க்கான ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல். இத்திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ் வசதி உள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி-க்கான 4ஜி இன்டெர்நெட் டேட்டா 28 நாள்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பாக இத்திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்-கள் இலவசம். இந்த 219ரூபாய் ஆஃபர் ஏர்டெல்லின் 199ரூபாய் ஆஃபர் போலவே இருந்தாலும், புதிய திட்டத்தில் மாதம் எத்தனை காலர் ட்யூன்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளும் ஆஃபர் உள்ளது.

இது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்வைத் தரும் திட்டமாக உள்ளது. காலர் ட்யூன் ஆஃபர் வேண்டாதவர்கள் 199ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தையே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

More News >>