மானிய விலையில் ஸ்கூட்டர் - கர்நாடகாவில் காங்கிரஸ் அதிரடி
கர்நாடகாவில் அரசு மற்றும் பஞ்சாயத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் ஸ்கூட்டர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்.
அதன்படி, கர்நாடக சட்டசபை தேர்தலில் அரசு பெண் ஊழியர்களை கவரும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற அரசு பெண் ஊழிகர்களுக்கு ஆண்டு வருவாய் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அம்மா உணவகம் இருப்பதைப்போல, கர்நாடகவில் இந்திரா உணவகம் என்ற பெயரில் சித்தராமையா அரசு செயல்படுத்தி வருகிறது. இப்போது காங்கிரஸ் அரசாங்கம் அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்தை போல கர்நாடகாவில், ஸ்கூட்டர் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com