சங்கரன்கோவிலில் திமுக போராட்டம் : முடிவில் அரிசி பை வாங்க முண்டியடித்த கூட்டம் பின்னணி என்ன?

சங்கரன்கோவிலில் திமுக பொதுக் கூட்டத்திற்கு நலத்திட்ட உதவி என்ற பெயரில் வழங்கப்பட்ட அரிசி பையை வாங்க முண்டியடித்த முதியவர்கள் மற்றும் கைக் குழந்தையுடன் இருந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டத்தை காட்டுவதற்காக வயதான முதியவர்கள் மற்றும் பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அப்படி, அழைத்து வரப்பட்டவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களுக்கு 5 கிலோ அரிசிப்பை வழங்குவதாக கூறியுள்ளனர். பொதுக் கூட்டம் நடந்த மேடையின் அருகிலேயே அரிசி பையுடன் இருந்த வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .

தொடர்ந்து, கூட்டம் முடியும் வரை அனைவரும் காத்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் டோக்கனை கையில் வைத்திருந்த ஆண்களும் பெண்களும் அரிசிப்பை இருந்த வாகனத்தை சுற்றி வளைத்தனர். வயது முதிர்ந்த பெண்கள் , கைக்குழந்தையுடன் இருந்த பெண்கள் அரிசிப பை வாங்குவதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 200க்கு மேற்பட்டவர்களுக்கு டோக்கன் கொடுத்து அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களில் ஒரு சிலருக்கே அரிசி பை கொடுக்கப்பட்டது. மற்றவர்கள் திமுக நிர்வாகிகளை திட்டியபடி ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

More News >>