கன்னியாகுமரி : பள்ளிகளில் படம் திரையிட பண வசூல் : ஒருவர் கைது

பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நற்சிந்தனை வளர்வதற்கு தூண்டுகோலாக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தன்னம்பிக்கை வளர்க்கும் வகையிலும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள்பள்ளிகளில் திரையிடுவது வழக்கம். அதற்காக மாணவர்களிடமிருந்து சிறு தொகை வசூலிக்கப்படும். இந்நிலையில் திரைப்படத்தை அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மாணவர்களிடமிருந்து தலா பத்து ரூபாய் கட்டணம் வசூலித்து திரையிடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கையெழுத்துட்டு அனுப்பியது போன்ற ஒரு போலி கடிதத்தை ஒரு கும்பல் பல்வேறு பள்ளி நிர்வாகங்களிடம் வழங்கி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக தெரிகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரையிட்ட அதே பழைய படங்களை மீண்டும் திரையிடுவதற்கு ஏன் ?மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார் என்ற சந்தேகம் சில பள்ளி நிர்வாகத்தினரிடத்தில் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அப்படி ஏது கடிதம் வழங்கப்படவில்லைங இதனால்,, அந்த கும்பலால் பள்ளி நிர்வாகம் களுக்கு வழங்கப்பட்ட கடிதங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில், போலியாக கடிதத்தை தயாரித்து,பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து வசூல் செய்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகத் பிரைட் நேசமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நேசமணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.

More News >>