தாம்பரம் - நெல்லை புதிய ரயில் சேவை தொடங்கியது

ஏழைகளின் வசதிக்காக முழுவதும் முன்பதிவில்லா 18 பெட்டிகளையுடைய ‘அந்த்யோதயா விரைவு’ ரயில் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது. தாம்பரம்- திருநெல்வேலி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் என 2016 ஆம் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதின் படி தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம்- செங்கோட்டை வழித்தடங்களில் அந்த்யோதயா விரைவு ரயில்களை தினசரி இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தாம்பரம் - திருநெல்வேலி இடையே 18 முன்பதிவில்லா பெட்டிகளுடன் கூடிய அந்த்யோதயா விரைவு ரயில்கள் 27ஆம் தேதி முதல் இயங்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (16191) பிற்பகல் 3.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் . அதேபோல் திருநெல்வேலியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் (16192) மறுநாள் காலை வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு,விழுப்புரம், மயிலாடுதுரை,தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல்,மதுரை, விருதுநகர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்ததிருந்தது. அதன்படி ரயில்கள் இயக்கப்பட்டன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>