நெல்லையில் பரிதாபம்: பிளக்ஸ் பேனர் மின் கம்பியில் உரசி வாலிபர் பலி

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பரது மகன் பேச்சிமுத்து(வயது 30).இவர் நெல்லை பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்கமைள சாலை ஓரங்களில் அமைக்கும் பணியை செய்து வந்தார்.

இன்று (மார்ச்13) காலை பாளையங்கோட்டை குலவனிகர்புரம் ரெயில்வே கேட் அருகே விளம்பர பேனரை வைக்கும் பணியில் தனது நண்பருடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். . இருபுறமும் இரும்பு பைப்புகள் அமைத்து , பேனரை பொருத்திய பின்னர் அதனை தூக்கிக் கொண்டு சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொருபுறத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது , எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் கம்பியில் பிளக்ஸ் பேனரின் இரும்பு பைப் உரசியது. தொடர்ந்து, இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து படுகாயம் அடைந்தார். மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பேச்சிமுத்து பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>