திசையன்விளை வி. வி .பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா: விளையாட்டு பல்கலைக்கழக டீன் பங்கேற்பு
நெல்லை மாவட்டம் திசையன்விளை வி .வி . பொறியியல் கல்லூரியில் 15ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் பா. வனிதா சிறப்பு விருந்தினரை கௌரவித்தார். டி.ஏ.ஹாஜா மொய்னுதீன் அனைவரையும் வரவேற்றார். ஜி.சுரேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் மாணவர்கள் கல்வி மட்டுமில்லாமல் விளையாட்டு துறை யிலும் ஆர்வம் காட்ட வேண்டும். ஆரோக்கிய மான வாழ்க்கை வாழ உடற்பயிற்சி யின் மேற்கொள்ள வேண்டுமென் அறிவுறுத்தினார். மாணவர்கள் தாங்கள் விரும்பும் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை ஷீலா ஸ்டீபன் வழங்கினார். கல்லூரி உடற் கல்வி இயக்குனர் ஜாண்சன் விளையாட்டு அறிக்கை வாசித்தார். விழா முடிவில் உடற் கல்வி ஆசிரியை அம்பிகா தேவி நன்றி கூறினார்.