நாங்குநேரி அருகே உலகம்மாள் ஊராட்சி ஒன்றி பள்ளி விளையாட்டு விழா
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கல்வி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் உலகம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இன்று (மார்ச் 14) விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி மலர்விழி தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் சுதாலட்சுமி , பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை கற்பகமீனாட்சி வரவேற்புரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் செ.பால்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
சமூக ஆர்வலர் பிரபாகரன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாயனேரி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவகுமார், பத்தினிபாறை சி.எம்.எஸ் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபத்துரை , மருதகுளம் சமூக செயற்பாட்டாளர் வீரபாண்டியன், நாங்குநேரி வட்டார வளர்மைய பயிற்றுனர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து , பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவி பரம சக்தி நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மலர்விழி, பரமசக்தி, பால்ராஜ், கற்பக மீனாட்சி, மகேஸ்வரி, பத்மா, சுப்புலா, பேச்சியம்மாள், முத்துச்செல்வி, முருகன், உதயகுமார், சந்தனராஜ், சித்திரைவேல் முருகன், மாடசாமி, முருகம்மாள், கிருஷ்ணவேணி, வேல்கனி, மணிமேகலை, சித்திரைகனி மற்றும் விஜய் உள்ளிட்ட பலரும் ஏற்பாடு செய்திருந்தனர்.