எந்தெந்த கட்சிகள் மக்களிடத்தில் பிரிவினையை உருவாக்குகின்றன?
இந்தியாவில் வெறுப்பை விதைத்து பிரிவினையை உருவாக்குவதில் பாஜக முதலிடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
ஜனநாயக மறுசீரமைப்பிற்காக அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சுகளை பேசி வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் புள்ளிவிபரங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
இந்த தகவல்களின் படி இந்தியா முழுவதும் 15 எம்.பி.க்கள் மற்றும் 43 எம்.எல்.ஏ.க்கள் மீது வெறுப்பு பேச்சுகளை பேசியதாக வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதில் மொத்தம் 15ம் எம்பிகளில் 10 எம்பிகள் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர். அதே போல் 43 எம்எல்ஏக்களில் 17 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், பகுஜன்சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஆல் இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி, ஆல் இந்திய மஸ்சிஸ் கட்சி உள்ளிட்டவையும் அடங்கும்.
இதில் தமிழகத்தில் உள்ள பாமக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களிடம் பிரிவினையை உருவாக்கும் வெறுப்பு பேச்சு பேசியவர்களின் பட்டியலில் இடதுசாரி கட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com