கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை...நிரம்பிவழியும் கால்ஷீட்...உற்சாகத்தில் தனுஷ்!

கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்துக்கொண்டு அனைத்தையும் அசால்ட்டாக முடித்து கேன்ஸ் விழா வரையில் ஜொலிக்க உள்ளார் நடிகர் தனுஷ்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில்ல் நடிகர் தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. விரைவில் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி மிக்கபெரும் மூன்றாம் வெற்றியை பதிவு செய்யும் என வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

மேலும், தொடர்ச்சியாக இயக்குநர் பாலாஜி மோகனின் 'மாரி-2' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதன் பின்னர் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரே ஒரு பாடலில் தமிழ் ரசிகர்களைக் கட்டிவைத்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' திரைப்படத்தின் ரிலீஸும் தனுஷ் பட்டியலில் தயாராக உள்ளது. அடுத்ததாக பெயர் சூட்டப்படாத கார்த்திக் சுப்பராஜின் படம், துரை செந்தில் குமார் இயக்கத்தில் மற்றொரு படம் என தனுஷ் கால்ஷீட் நிரம்பி வழிகிறது.

இத்திரைப்படங்களைவிட மிக முக்கியமான திரைப்படமாக தனுஷின் கரியரில் அமையவுள்ளது விரைவில் வெளியாக இருக்கும் தனுஷின் ஹாலிவுட் திரைப்படம். 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து முடித்துள்ள நிலையில் இந்த ஆண்டே அப்படமும் திரைக்கு வந்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்யவுள்ளது.

இதில் கூடுதல் விசேஷமாக வருகிற மே முதல் வாரத்தில் தொடங்கவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷின் ஹாலிவுட் திரைப்படம் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' திரையிடப்பட உள்ளது தனுஷை மேலும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>