நெல்லையில் மார்ச் 21 : விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அன்றைய தினம் காலை 11.00 மணியளவில் கூட்டம் தொடங்குகிறது.

இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

More News >>