ஓவியப் போட்டியில் முனைஞ்சிப்பட்டி மாணவன் தொடர் வெற்றி

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் உலக கருவிழி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடந்தது. இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியின் முனைஞ்சிப்பட்டி குருசங்கர் அரசுப்பள்ளி மாணவன் கோசல் ராம் முதலிடம் பிடித்தான்.

அதே போல, பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியம் சார்பில் கற்பது எளிது என்ற நிகழ்ச்சியில் 'உங்கள் கனவு ' என்ற தலைப்பில் நடந்த ஓவியப் போட்டியிலும்  மாணவன் கோசல்ராம் முதல்பரிசு பெற்றான்.

மாணவன் கோவல்ராமை  குருசங்கர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி, பயிற்சியளித்த முன்னாள் ஓவிய ஆசிரியர் ஓய்வு ஞானசேகர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர். மாணவன் கோசல்ராம் தொடர்ச்சியாக பல ஓவியப் போட்டியில் வெற்றி பெற்று வருவது  குறிப்பிடத்தக்கது. 

More News >>