காவல்கிணறு அருகே விபத்து : பா.ஜ.க பிரமுகர் வாகனம் மோதி இரு தொழிலாளர்கள் பலி 

காவல்கிணறு அருகே நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பாஜக பிரமுகர் புத்தம் புது  சொகுசு கார் மோதியதில்  கூலித்தொழிலாளிகள் இருவர் பலியானார்கள். 

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள  ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் அசோக். பாஜக பிரமுகரான இவர் கடந்த மார்ச் 4 ஆம் தேதிதான் புதியதாக  இன்னோவா கிறிஸ்டா சொகுசு காரை வாங்கினார் . அந்த சொகுசு காரில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த பாலக்குமார் என்பவர்  வள்ளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  கன்னியாகுமரி சந்திப்பு நான்கு வழிச்சாலையில் குமாரபுரம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில்  கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளிகள் நாகராஜன் , வினோத் ஆகிய  இருவர் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்னகாமல் இன்று அதிகாலையில்  இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம்  குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4 ஆம் தேதிதான் அசோக்  கால் வாங்கிய போது, வெளியிட்ட பேஸ்புக் பதிவில்,  பாஜக சட்டமன்ற குழு தலைவரும் என் வாழ்வின் வழிகாட்டியுமான பாசமிகு பண்ணையார் நயினார் நாகேந்திரன் அவர்களால் Delivery எடுத்து அவர்களின் திருக்கரங்களால் பாஜக கொடியை ஏற்றிய மகிழ்ச்சியான தருணம் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>