தி.மு.க ஏமாற்றிய விஷயங்கள்: நெல்லையில் பட்டியலிட்ட நயினார் நாகேந்திரன்

தொகுதி மறுவரைவு குறித்து விவாதிக்க சென்னைக்கு 3 மாநில முதல்வர்கள் வருகை தந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள்  வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் குறித்து பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவும் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கூறியதாலது, 

அரசியல் நோக்கத்துடன் திமுக  மத்திய அரசை எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள்.  டங்ஷ்டன் சுரங்கம் விவகாரத்தை பொருத்தவரை மத்திய அரசு பிப்ரவரி 5ஆம் தேதி வரை நேரம் கொடுத்திருந்தது: ஆனால் , அதற்கு முன்கூட்டியே தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து தேவையில்லாத பிரச்சனை செய்தது.  தொகுதி மறுவரைவு செய்து  குறைக்கப்படுகிறது என்று மத்திய அரசால் எங்கேயும்  சொல்லவில்லை . அப்படி சொல்லாத பட்சத்தில் நமக்கு தண்ணீர் தராத கர்நாடகா துணை முதல்வரையும் கேரளா முதல்வரையும் அழைத்து அரசியல் கண்ணோட்டத்துடனேயே நாடகம் நடத்துகிறார்கள்.

இந்தியாவில் நூற்றுக்கு 95 சதவீதம் பேர் கூடுதல் மொழியை படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கிறது. தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.  திமுக அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் வெற்று அறிவிப்புகள்தமான்.  நடைமுறைக்கு வருவதில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு  முதல் கையெழுத்தாக போடுவேன் என்று முதல்வர் அறிவித்தார் . அதேபோல் டாஸ்மாக்கையும் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மூடுவோம் என்று அறிவித்தார்.  இப்போது,   சட்டமன்றத்தில் டாஸ்மாக் கடைகளை குறைப்பது குறித்து நாங்கள் எங்கும் சொல்லவில்லை என்று கூறுகிறார்கள். மகளிர் உரிமை தொகையும் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் கழித்து பொது தேர்தலை  முன்னிட்டுததான் கொடுக்கப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை என்று கூறி விட்டு, பின்னர்  தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும்  என்று அறிவித்து விட்டனர். அரசு ஊழியர்கள் அனைவரும் தற்போது திமுக அரசுக்கு எதிராக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More News >>