`அன்பிற்குரிய பிரதமரே, இதைப் பற்றியும் சீனாவில் பேசலாம்!- மோடியை சீண்டும் ராகுல்

சீன சுற்றுப் பயணத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார் ராகுல் காந்தி.

தொடர்ச்சியாக வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்றும் புதிதல்ல. இந்திய நாடாளுமன்றத்துக்கு அட்டெண்டன்ஸ் போடுகிறாரோ இல்லையோ, மாதா மாதம் ஏதாவது ஒரு நாட்டில் கண்டிப்பாக அட்டெண்டன்ஸ் போட்டு விடுவார் பிரதமர்.

தற்போது அவர் சென்றிருக்கும் நாடு சீனா. அங்கு சீன அதிபர் ஜின்பிங் உடன் இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் மோடி. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடிக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது ட்வீட்டில், `அன்பிற்குரிய பிரதமரே, சீன சுற்றுப் பயணத்தில் நீங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதை நேரலையில் பார்த்தேன். நீங்கள் பதற்றத்துடன் இருப்பதை காண முடிந்தது. உங்களுக்கு சில நினைவூட்டல்கள். டோக்லாம் விவகாரம் மற்றும் சீன- பாகிஸ்தானின் புதிய சாலை திட்டம் இந்திய எல்லைக்குகள் செல்கிறது. இதைப் பற்றியும் நீங்கள் பேசுவதை இந்தியா பார்க்க விரும்புகிறது. உங்களுக்கு எங்கள் ஆதரவு இருக்கிறது’ என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததால், பல மாதங்களுக்கு நமக்கும் சீனாவுக்கும் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. மற்றும் சீன- பாகிஸ்தானின் புதிய சாலை போடும் திட்டத்தால் இந்தியாவுக்கு பாதுகாப்பு சார்ந்து பலத்த பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த இரு விஷயங்களைப் பற்றியே ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை பேச வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>