காவிரிக்காக மெரினாவில் போராட்டம் - வேல்முருகன் திட்டவட்டம்

காவிரி மேலாண்மை அமைக்ககோரி மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகில் திட்டமிட்டபடி 29-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கப் பிறகு கூட காவிரி மேலாண்மை அமைக்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் காவிரி வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி கொண்டே வருகிறது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது, “காவிரிக்காக மேலாண்மை அமைக்க கோரி மெரினாவில் ஜனநாயக வழியில் போராட போலீஸாரிடம் அனுமதி கோரினோம், அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனால், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

போராட்டம் நடைபெறும் தேதிக்கு முன்னர் அனுமதி அளிக்கா விட்டாலும் நாங்கள் திட்டமிட்டபடி 29-ஆம் தேதி போராட்டம் நடத்துவோம். போராட்டத்தில் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய அமைப்புகள், பலதரப்பட்ட இயக்கங்கள், மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்குபெற உள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com 

More News >>