தூய்மையான கிராமங்களுக்கு மட்டுமே இலவச அரிசி: கிரண்பேடி அறிவிப்பு

புதுச்சேரியில் தூய்மையான கிராமங்களுக்கு மட்டும் தான் இலவச அரிசி வழங்கப்படும் என கவர்னர் கிரண்பேடி கிடுக்கிப்பிடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை செயபடுத்த போராடி வருகிறார். இதற்காக, பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகளை அவர் செய்தும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறார்.

ஏற்கனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச அரிசி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தில் தற்போது கவர்னர் கிரண்பேடி கிடுக்கிப்பிடி அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

அதில், கிராமங்களில் தூய்மைப் பணியை வலியிறுத்தும் வகையில் சுத்தமான கிராமங்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என கூறியுள்ளார். சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் அரிசி வழங்கப்படும் என்றும், சான்றிதழ் பெறாத கிராமங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார். கிரண்பேடியின் இந்த அறிவிப்பால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>